• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தோட்டப் பணியாளர்களுக்கு 10 நாளில் நிலுவை ஊதியம்: ஆட்சியர்

December 20, 2016 தண்டோரா குழு

வால்பாறை தேயிலைத் தோட்டப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியம் வங்கிகளின் மூலமாக பத்து நாட்களுக்குள் வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியார் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2௦) வால்பாறை தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியத் தொகையினை வழங்குவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந. ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வால்பாறை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் த. கிருஸ்துராஜ், தொழிலாளார் நல வாரிய இணை ஆணையார் மாரிமுத்து, வால்பாறை நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஹமீது, முன்னோடி வங்கி மேலாளார் கனகராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம் மற்றும் வங்கி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஒரு மாதம் காலமாக புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வங்கியின் மூலம் வழங்கப்படுகின்றன. அத்துடன், பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளைத் திரும்ப் பெறும் பணியும் நடைபெறுகிறது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக தாமதம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, வால்பாறை தேயிலைத் தோட்டப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில் வங்கிகளுக்கு எதிர்பாராத சிரமம் ஏற்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக சில ஆலோசனைகள் வங்கியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதையடுத்து, பணப்பட்டுவாடாவை தோட்டப் பணியாளர்களுக்கு புதன்கிழமை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணியாளர்களுக்கு ஊதியம் தரவேண்டிய தேயிலைத் தோட்டங்களுக்கு அப் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் வங்கி ஆகிய வங்கிகளின் பிரதிநிதிகள் செல்வர்.

அங்கு, பணியாளர்களை அழைத்து, ஒவ்வொருவருக்கும் ஊதியத் தொகை, நிலுவை எவ்வளவு என்பதை அறிந்து உறுதி செய்துகொண்டு, பணியாளர்களிடம் அதற்கான படிவத்தை நிரப்பிக் கொண்டு, தோட்ட நிறுவனங்களின் அதிகாரிகளின் முன்னிலையில் பணப் பட்டுவாடா செய்வர்.

ஒவ்வொரு தேயிலைத் தோட்ட நிறுவனத்துக்கும் நேரில் சென்று பணியாளர்களுக்குப் பணம் வழங்கும் விவரம் முன்கூட்டியே தெரிவிக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வங்கியின் மூலமாக புதன்கிழமை முதல் பணப் பட்டுவாடா தொடங்கி பத்து நாட்களுக்குள் அப்பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கும் நிலுவை ஊதியத் தொகை வழங்கப்படும்.

வங்கி கணக்கு தொடங்காத பணியாளார்கள் உடனடியாக வங்கி கணக்கைத் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க