• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“ தோழர் ” குறித்து சைலேந்திரபாபு விளக்கம்

January 25, 2017 தண்டோரா குழு

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் டிரண்டாகி வரும் “தோழர்” என்கிற வார்த்தை தொடர்பாக தான் எந்தவித கருத்தும் கூறவில்லை என ஏடிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் வாங்க தோழர். போங்க தோழர்.. என்றபடி தோழர் என்கிற வார்த்தை டிரெண்டாகி வருகிறது. ஒரு சிலர் ‘தோழர்’ என்றே தங்களது டி.பி.க்களையும் வாட்ஸ் அப்பில் மாற்றி வருகின்றனர்.இரவு வணக்கம் தோழர் காலை வணக்கம் தோழர் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது தோழர் என்ற வார்த்தை.

இந்த வார்த்தை எப்படி டிரென்ட் ஆனது என தேடியபோது தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்கள், யாரேனும் தங்களுக்கு தோழர் எனக் கூறிக்கொண்டு குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அனுப்பினால் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் உடனடியாக அழித்து விடுங்கள் எனச் சொன்னதாக ஒரு தகவல் பரவியது.

இதனைதொடர்ந்து பலரும் தோழர் என்கிற வார்த்தையை சமூக வலைத் தளங்களில் பயன்படுத்த அவ்வார்த்தை தற்போது டிரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக சைலேந்திர பாபு தனது டுவிட்டர் பக்கத்தில்


எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க