• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நகராட்சிகள், பேரூராட்சிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு

February 8, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து வரும் 22ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

கூடலூர் நகராட்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யலயா பாலிடெக்னிக் கல்லூரியிலும், காரமடை நகராட்சிக்கு மெட்ரோ மெட்ரிக் பள்ளியிலும், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம், 4. வீரபாண்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய பேரூராட்சிகளுக்கு பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும், மோப்பிரிபாளையம், சிறுமுகை, அன்னூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு அன்னூர் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சர்க்கார்சாமக்குளம், இடிகரை ஆகிய பேரூராட்சிகளுக்கு கோவில்பாளையம் தகவல் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்த மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்படும் பாதுகாப்பு அறை மற்றும் மையங்களில் செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் போன்றவற்றை கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, வாக்கு எண்ணிகையின்போது வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர ஏதுவாக தடுப்புகள் அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகிய வசதிகளை ஏற்படுத்திடவேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இவ்வாய்வில் உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகராட்சி கமிஷனர்கள் வினோத் (மேட்டுபாளையம்), விஜயா(கூடலூர்), மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரமேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க