August 29, 2023 தண்டோரா குழு
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மகளிர் அணி கோவை மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ வீட்டு வளாகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு நடனமாடி ஓனம் பண்டிகையை கொண்டாட்டினர்.
இதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,ஓணம் பண்டிகையொட்டி பண்டிகை நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கோவை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தோடு எல்லை பகுதி மாவட்டம் என்பதும் இல்லாமல் அதிகமான கேரள மக்கள் தொழில் துறையில் கல்வித்துறையில் மிகச் சிறப்பான முறையில் பங்களிப்பை வளர்ச்சிக்கு மலையாளம் மொழி பேசுகின்ற சமுதாயத்து மக்கள் இங்கு அதிகமாக இருக்கிறார்கள்.
சகோதர சகோதரிகளுக்கும் எங்களுடைய திருவோண நல்வாழ்த்துக்கள் தமிழக முதல்வர் கூட ஓனம் திருநாளில் மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.வரவேற்கின்றோம் ஆனால் தீபாவளிக்கு கூட இது முதல்வர் வாழ்த்து கூறினால் அனைவருக்குமான முதல்வராகவும் செயல்படுகிறார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும் ஓணம் மாவலி சக்கரவர்த்தி உடைய கதை தீபாவளிக்கும் ஒரு புராணக்கதை இருக்கிறது.
ஓனத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் எங்களுடைய எதிர்பார்ப்பு,அனைவருக்கும் இந்த தீபாவளிக்காக வாழ்த்து தெரிவிப்பாரா என எதிர்பார்க்கிறோம்.பேஷன் ஷோ மற்றும் நடன நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், கைத்தறி ஆடைகள் பிரபலப்படுத்த வேண்டும் நெசவாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஃபேஷன் ஷோ ஆறு வருடமாக செய்து வருகிறோம்.
இந்த நடன நிகழ்ச்சி அனைத்து பெண்களும் கொண்டாட கூடிய நடனம். இது ஓணம் ஒட்டி கலந்து கொள்கிறோம். இதற்கும் சினிமாவிற்கும் முடிச்சு போடுகிறீர்கள் அந்த வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.திமுக கோவை மேயர் பற்றிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த வானதி,ஒரு அதிகாரம் வாய்ந்த பொறுப்பு மேயர் என்பவர் அரசியல் அதிகார முதன்மையான நபர் மாநகராட்சி இருப்பவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற புகார் தெரிவிப்பது என்பது மாநில அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பிரதிநிதிகளாக நிர்வாகிகள் ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பொதுமக்களை மிரட்டுவது சட்டத்தை தங்களுக்கு சாதகமாக சர்வ சாதாரணமாக நடக்கின்ற விஷயம் கோவை மேயர் விஷயத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊழலுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது யார் யாருக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கிறதோ அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இருக்கின்றதோ அதை வைத்து தான் மத்திய அரசு ஏஜென்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.அந்த கட்சி இந்த கட்சி எந்த பாகுபாடும் இல்லை, பிஜேபிக்கு இல்லை, அவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் இதனை எடுத்து வருகிறார்கள் என தெரிவித்தார்.