• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ஆரியின் கின்னஸ் சாதனை

August 31, 2017 தண்டோரா குழு

இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் வகையில் நடிகர் ஆரியின் மாறுவோம்,மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

நடிகர் ஆரி இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் விதமாக , “மாறுவோம் மாற்றுவோம்” என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் சார்பாக, “நானும் ஒரு விவசாயி” என்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் – நல்லநிலம் என்ற ஊரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 2683 பேர்,கலந்துக் கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு நாற்றுகளை நட்டதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக விவசாயத்தை மீட்டெடுக்கவும்,நாட்டு விதைகளை காப்பாற்றவும் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க