October 19, 2017 தண்டோரா குழு
நிலவேம்பு கசாயம் பற்றி தவறான தகவல் கூறிய நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரிடம் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அதற்காக அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் டெங்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது.எனினும், அந்தத் தகவல் வதந்தி என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும்,’நிலவேம்புக் குடிநீர் குறித்து வதந்தி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில்,நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில்,‘சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்கக் கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.
இதையடுத்து, சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், நிலவேம்புக் குடிநீர்குறித்து கமல் தவறானத் தகவல்களைப் பரப்புவதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடிகர் கமல்ஹாசன் புகார் அளித்துள்ளார்.