• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

May 4, 2017 தண்டோரா குழு

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் 31ம் தேதி, நடந்தது.இதில் ரஜினி உள்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

தற்போது இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் அந்த பகுதியில் உள்ள மக்கள் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவில், பிரகாசம் ரோடு மற்றும் ஹபிபுல்லா ரோடு இணையும் இடத்தில் கிட்டத்தட்ட 33 அடி பகுதியை இந்த கட்டிடம் ஆக்கிரமித்துள்ளது.

இதனால் அங்கு வசிப்பவர்களால் பிரகாசம் ரோட்டை பயன்படுத்த முடியவில்லை.இதனால் இப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும், நடிகர் சங்க தலைவர் நாசர் ஏற்கனவே சி.எம்.டி.ஏ. மற்றும் கார்பரேஷனின் அனுமதியை பெற்றுவிட்டதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “இந்த குற்றச்சாட்டிற்கு நடிகர் சங்கம் மற்றும் கார்ப்பரேஷன் துறையினர் நாளை நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க