July 14, 2017
தண்டோரா குழு
பிரபல நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திலீப்பை அங்கமாலி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மேலும் திலீப்பை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி கோரினர்.
இதைத்தொடர்ந்து நடிகர் திலீப் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் வழங்க மறுத்ததோடு, மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.