June 19, 2022 தண்டோரா குழு
கோவை பால் கம்பெனி பகுதியில் புரனமைக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆவின் பாலகத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
முதல்வர் ஆணையை ஏற்று தமிழகம் முழுவதும் ஆவின் பால் உற்பத்தியையும் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் ஏறக்குறைய 10 ஆண்டுகாலம் மூழ்கிப்போன ஆவினை இன்றைய தினம் மூழ்கிய கப்பலை நீர்மூழ்கி கப்பல் ஆக மாற்றி வருகிறோம் எனவும் அதன் உற்பத்தியை அதிகரிக்க தமிழகம் முழுவதும் ஆவின் நிலையங்களை துவக்கி வைத்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் இன்று விவசாய உற்பத்தியில் மேம்படுத்தவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். கோவை மாநகரத்தில் இன்று ஒரு கோடி மதிப்புள்ள ஆவின் பாலகத்தை திறந்து வைத்துள்ளோம் எனவும் கூறினார். ஆவின் பணியிடங்களை பொறுத்தவரை கடந்த காலங்களில் முறைகேடான முறையில் வேலைவாய்ப்பு துறையின் விதிகளை மீறி ஆட்களை நிரப்பும் பணியை மேற்கொண்டதாகவும் தற்போது முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தி வைத்துள்ளார்கள் என்றும் அந்த பணிகள் முறைப்படுத்தி துவங்க உள்ளதாக தெரிவித்தார்.
ஆவின் சேர்மன் பொறுத்தவரை ஒட்டுமொத்த தீர்மானம் ஏற்றி கலைத்துவிட்டோம் எனவும் அதனுடைய கோப்பு கவர்னர் கையெழுத்துக்காக காத்திருப்பதாகவும் கையெழுத்து போட்டவுடன் சேர்மன் தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார். கள்ளக்குறிச்சி திருப்பத்தூரில் புதிய பால்பண்ணை திறக்கப்பட உள்ளதாகவும் நேற்று நாமக்கல்லில் பால்பண்ணை ஏறக்குறைய அதனை பதப்படுத்தி விநியோகம் செய்ய உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை பற்றிய கேள்விக்கு, விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆவின் பாலகங்களில் ஏதேனும் தவறுகள் நடப்பதாக தகவல் வந்தால் ஆய்வு செய்து சீல் வைக்கப்படும் என தெரிவித்தார். ஆவின் பாலகத்தில் சிக்கன் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய கூடாது இதனால் மூன்று கடைகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஆவின் ஹெல்த் மிக்ஸ் குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகார் கருத்துக்கு வழக்கு தொடர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். எங்களுடைய தரத்திற்கு ஏற்றவாறு பேசினால் அவருக்கு பதிலளிக்கலாம் எனவும் அவர் நோட்டாவை விட கம்மியான ஓட்டுகள் வாங்கியவர் எனவும் தெரிவித்த அவர் அண்ணாமலை தவறான கருத்தையும் தன்னிலை முன்னிலை படுத்திகொள்ள வேண்டும் என்பதற்காக நானும் இருக்கிறேன் என வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல் நானும் ரவுடி நானும் ரவுடி என கூறி வருகிறார் என விமர்சித்தார்.
ஹெல்த் மிக்ஸ் விற்பனை இன்னும் தொடங்கவே இல்லை எனவும் அதற்கு முன்பே 27 கோடிக்கு வாங்கி விட்டார்கள் என அபாண்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளார் என தெரிவித்தார். மேலும் அவருக்கு அதற்கான அரிச்சுவடி கூட தெரியாது எனவும் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை எனக் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டை காட்டிலும் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.