July 18, 2017
தண்டோரா குழு
மலையாள நடிகா் திலீப்பின் ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நடிகர் திலீப் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் வழங்க மறுத்ததோடு, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.
இதனை தொடா்ந்து நடிகர் திலீப் சார்பில் திருவனந்தபுரம் உயா்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடி வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நடிகர் திலீப் சார்பில் உயா்நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த உயா்நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், மேலும் இந்த மனு மீதான விசாரணை வருகிற 20ம் தேதி நடைபெறும் என்று ஒத்திவைத்துள்ளது.