August 21, 2017
தண்டோரா குழு
கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்த நடிகை சினேகாவை மர்ம நபர்கள் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தனியார் ஓட்டலில் ஜிபிஎஸ் தொடர்பான செயலியை அறிமுகம் செய்யும் விழாவில் நடிகை சினேகா கலந்துக் கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் இடையில் முகம்மூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் சினேகாவை கத்தி முனையில் கடத்தி சென்றனர். இதனால் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
அப்போது, நிகழ்ச்சி ஏற்ப்பட்டாளர்கள் இது வெறும் செயலி தொடர்பான ஒரு ஒத்திகை தான் யாரும் பதற வேண்டாம் எனக் கூறினர். இதையடுத்து, அனைவரும் அமைதியாகினர்.
திடீரென சினேகா கடத்தப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.