April 18, 2023
தண்டோரா குழு
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (30).இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார்.ரஹ்மத்துல்லா கடந்த 10 நாட்களாக செல்வபுரம் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இதனிடையே நேற்று இரவு பெயிண்டிங் வேலை முடித்துவிட்டு செல்வபுரம் அருகே உள்ள தில்லை நகர் பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில் இவர் அவரது 3 நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் போது, தகராறு ஏற்பட்டுள்ளது.
பார் உரிமையாளர் இவர்களை வெளியேற்றி உள்ளார்.நான்கு பேரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரைப் ஒருவர் தாக்கி கொண்டனர்.இதில் இரண்டு பேர் தங்கள் வைத்திருந்த கத்தியால் ரஹ்மத்துல்லாவை குத்தியுள்ளனர்.சம்பவ இடத்தில் ரஹ்மத்துல்லா இறந்துவிட்டார்.
செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.