July 28, 2017 தண்டோரா குழு
பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் துணை முதல்வர் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.இந்நிலையில் பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக பா.ஜ.,வின் சுஷில்குமார் மோடி பதவியேற்று கொண்டனர்.
மேலும் அரசிற்கு உள்ள பெரும்பான்மையை இரண்டு நாளில் நிரூபிக்க வேண்டும் என கவர்னர் திரிபாதி, முதல்வருக்கு நிதிஷ்குமாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக பீகார் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்படி இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக 131 பேரும்,அரசுக்கு எதிராக 108 பேரும் ஓட்டுப்போட்டனர்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ள நிதிஷ்குமார் ஆறாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.