March 16, 2017 தண்டோரா குழு
கோவா சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் அரசு வெற்றி பெற்றதாகப் பேரவைத் தலைவர் அறிவித்தார்.
கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் மகாராஷ்டிர கோமந்தக் கட்சி, சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியமைக்க முடிவு செய்தது. ஆனால், கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது.
ஆனால், மனோகர் பாரிக்கர் பதவியேற்பதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆனால், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மனோகர் பாரிக்கர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மனோகர் பாரிக்கர் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது மனோகர் பாரிக்கர் அரசுக்கு ஆதரவாக 22 உறுப்பினர்கள் வாக்களித்தனர். காங்கிரஸ் கட்சிக்கு 16 பேர் மட்டுமே ஆதரவு அளித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் விஸ்வஜித் ராணே வெளிநடப்பு செய்தார். இதனால், மனோகர் பாரிக்கர் அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாகச் சட்டப் பேரவைத் தலைவர் அறிவித்தார்.