April 14, 2022
தண்டோரா குழு
கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் பாலதண்டாயுதம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை சமூக பாதுகாப்புத் திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் மூலம் ஓய்வூதியம்பெற்று வரும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு அமைப்புசாரா நலவாரிய ஓய்வூதியதாரர்கள் 2022-2023ம் ஆண்டிற்கான ஆயுள் சான்றினை சமர்ப்பிக்க கடந்த 8ம் தேதி முதல் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.எனவே, நலவாரியங்களில் ஓய்வூதியம் பெற்று வரும்
ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றினை மேற்கண்ட இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். நலவாரிய அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டாம். மேலும் இது தொடர்பான ஏதேனும் விவரங்கள் பெற 0422-2324988 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.