• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நஸாரா டெக்னாலஜிஸ் உடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு கேமிங்கை வழங்குகிறது வி நிறுவனம் !

March 18, 2022 தண்டோரா குழு

முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடியா லிமிடெட் ஆனது, இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட புது விதமான பாணிகளிலான கேமிங் மற்றும் விளையாட்டு ஊடக நிறுவனமான நஸாரா டெக்னாலஜிஸ் லிமிடெட் உடன் இணைந்து, இந்தியாவிலுள்ள கேமிங் ஆர்வலர்களுக்கான புதிய பரிசாக வி செயலியில் வி கேம்ஸ்-யை அறிமுகப்படுத்துகிறது.

இந்த ஒருங்கிணைந்த செயல்பாடு மூலமாக, தனது கேமிங் தளமான வி கேம்ஸ்-ல் இந்தியாவிலுள்ள வெவ்வேறு நிறுவனங்களின் பிரபலமான கேம்கள் உட்பட பல்வேறு வகைகளிலான கேமிங் பயன்பாட்டை வி வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வழி வகை செய்கிறது.

அதிரடி, சாகசம், ஆர்கேட், கேஷ_வல், கல்வி, வேடிக்கை, புதிர், பந்தயம், விளையாட்டு, உத்திகள் சார்ந்த என்று 10 பிரபல வகைகளின் கீழ் உள்ள ஹெச்டிஎம்எல் 5 அடிப்படையிலான மற்றும் 1200-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு மொபைல் கேம்களுடன் ஒரு ஆழமான கேமிங் அனுபவத்தை வி கேம்ஸ் இல் வழங்குகிறது வி செயலி. எஃப்ஐசிசிஐ-இஒய் அறிக்கையின்படி, 2022-க்குள் இந்தியாவிலுள்ள 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் பொழுதுபோக்கு பிரிவிலுள்ள பெரிய அம்சங்களில் ஒன்றான கேமிங்கை பயன்படுத்துவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உற்சாகமான பொழுதுபோக்கு மற்றும் மன அமைதிக்கான இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பிரபலமான தேர்வாக இது இருக்குமென்றும்,அடுத்த சில ஆண்டுகளில் பயனர்களின் நேரம் மற்றும் பணத்தை அதிகளவு ஈர்க்கக்கூடியதாக அமையுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் கேமிங்கில் செலவழிக்கும் தேசிய சராசரி நேரம் 4 மணி நேரத்துக்கும் மேலாக இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது டெலாய்ட் மற்றும் சிஐஐ உருவாக்கிய ‘டிஜிட்டல் மீட்பு: ஒரு பில்லியன் இந்தியர்களைச் சென்றடைதல்’ என்ற தலைப்பிலான அறிக்கை.வி கேம்ஸ் மூலமாக தடையற்ற கேமிங்கை வி வாடிக்கையாளர்கள் விளையாடி மகிழலாம் என்று பேசிய வோடஃபோன் இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்துதல் அலுவலர் அவ்னீஷ் கோஸ்லா,

“இந்தியாவிலுள்ள 95 சதமுக்கும் மேற்பட்ட கேமிங் ஆர்வலர்கள் மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி பல்வேறு வகையான கேம்களில் திளைப்பதன் மூலமாக குறிப்பிடத்தக்க அளவில் கேமிங் நுகர்வு அதிகரித்திருப்பதைக் காண்கிறோம். ஸ்மார்ட்ஃபோன்களின் அதிக பயன்பாடும் 4ஜி வசதியின் இருப்பும் அபாரமான வளர்ச்சிக்கு வழிவகுத்து வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் கேமிங் உள்ளடக்கத்தை மிகப்பிரபலமான தேர்வாக்கி உள்ளது.

நமது டிஜிட்டல் உள்ளடக்கச் செயல்பாட்டு உத்திகளில் பெரியளவில் கவனம் செலுத்தும் பகுதியாக கேமிங்கை காண்கிறோம்; சாதாரணமாகவும் மிகத்தீவிரமாகவும் கேமிங்கை அணுகும் ஆர்வலர்கள் முன்னுரிமை தருவதாக வி அமைய வேண்டுமென்ற நோக்கத்துடன் கேமிங்கின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் விதமாக ஒரு விரிவான ஆட்டத்தை கட்டமைக்கவிருக்கிறோம், எங்களது டிஜிட்டல் உள்ளடக்க செயல்பாடில் ஒரு மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் பகுதியாக கேமிங்கை காண்கிறோம்.

நஸாரா டெக்னாலஜிஸ் உடனான எங்களது கூட்டு செயல்பாடானது, எங்களது பயனர்களுக்கு வி செயலி மூலமாக வழங்கப்பட்டுவரும் பரந்துபட்ட பிரத்யேகமான கேமிங் அனுபவத்தை மேலும் ஒருபடி உயர்த்துமென்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

வி கேம்ஸ் ஆரம்பகட்டமாக சாதாரண விளையாட்டுகளை தொடங்கும்; மெதுவாக சமூக விளையாட்டுகளையும், எதிர்காலத்தில் இ-விளையாட்டுகளையும் கூட தொடங்கவிருக்கிறது.

“இந்தியாவில் கேமிங் மட்டுமே பொழுதுபோக்கின் எதிர்காலமாக இருக்கப் போவதில்லை; ஆனால் ஒவ்வொரு நாளும் தங்களது மொபைல் போன்களில் கேம்களை விளையாடும் இந்தியர்களின் எண்ணிக்கை சில கோடிகள் என்பதால் ஏற்கனவே அது பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாகி விட்டது. வி உடன் சேர்ந்து பணியாற்றுவதிலும், எங்களது கேமிங் உள்ளடக்கம், இ-விளையாட்டு மற்றும் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் பொழுதுபோக்கு உட்பட ஒட்டுமொத்த தயாரிப்புகளையும் அவர்களது மாபெரும் அளவிலான பயனர்களுக்கு கிடைக்கச் செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறது நஸாரா” என்று தெரிவித்தார் நஸாரா டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் நிறுவனர் அண்டு குழும நிர்வாக இயக்குனரான நிதிஷ் மிட்டர்செய்ன்.

வி செயலியில் கிடைக்கும் வி கேம்ஸ்-ல் பிளாட்டினம் கேம்கள், கோல்டு கேம்கள், இலவச கேம்கள் என்று மூன்று பிரிவுகள் உள்ளன.

1. இந்த கேம் தொகுப்பில் பெருவாரியான இடத்தை பெறவிருக்கிறது கோல்ட் கேம்கள். ரூ. 50-க்கு போஸ்ட்பெய்ட் மற்றும் ரூ. 56-க்கு ப்ரீபெய்ட் கோல்டு பாஸ் பெறுவதன் மூலமாக 30 கேம்களை வி பயனர்கள் விளையாட முடியும்; 30 நாட்கள் வரை இதனைப் பயன்படுத்தலாம்.
ரூ. 499 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்கள் உடன் போஸ்ட்-பெய்ட் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 5 இலவச கோல்ட் கேம்களை பெறலாம்.

2. ரூ. 25 விலையுள்ள போஸ்ட்பெய்ட் பிளாட்டினம் பாஸ் மற்றும் ரூ. 26-க்கான ப்ரீபெய்ட் பாஸ் மூலமாக ‘ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் கட்டணம்’ எனும் அடிப்படையில் கிடைக்கும் பிளாட்டினம் கேம்கள் கிடைக்கும்.

3. அனைத்து வி வாடிக்கையாளர்களுக்காக இந்த தளத்தில் 250-க்கும் மேற்பட்ட இலவச கேம்களை வழங்கவிருக்கிறது வி கேம்ஸ்.

மேலும் படிக்க