August 17, 2017
தண்டோரா குழு
நாங்கள் இறந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு நினைவிடமாக அறிவித்துள்ளார்களா என ஜெ.அண்ணன் மகள் தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் அவர் வாழ்ந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா,
நானும் என் சகோதரர் தீபக்கும் தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள். இதுவரை காலில் விழுந்து கிடந்தவர் இப்போது திடீரென விழித்துக் கொண்டு விசாரணை கமிஷன் அமைத்துள்ளார்.வேதா நிலையத்தை சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை.அதை விட்டுத்தரவும் மாட்டோம்.
வேதா நிலையம் எங்களது பூர்வீக சொத்து என ஆணித்தரமாக கூறுகிறேன்.எங்களிடம் எந்த கருத்தையும் அரசு தரப்பில் இருந்து கேட்கவில்லை.நாங்கள் இறந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு நினைவிடமாக அறிவித்துள்ளார்களா? போயஸ் கார்டனை நினைவிடமாக அறிவித்த அரசின் நடவடிக்கையை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.