November 9, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவின் உள்ள உபேர் நிறுவனம் நாசாவுடன் இணைந்து பறக்கும் டாக்சிகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
அமெரிக்காவின்உபேர் நிறுவனம் பறக்கும் டாக்சிகளை அறிமுகப்படுத்த உதவும் விமான போக்குவரத்து மேலாண்மை அமைப்பை,நாசாவுடன் இணைந்து உருவாக்க செயல்பட்டு வருகிறது. அந்த பறக்கும் டாக்ஸிக்கு ‘உபேர் ஏர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வரும் 2௦2௦ம் ஆண்டு உபேர் ஏரின் செயல்திறனை உலகிற்கு காட்டிய பிறகு, வரும் 2023ம் ஆண்டு முதல் அதன் சேவையை தொடங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாசா வெளியிட்ட அறிக்கையில், “ஆளில்லா வான்வெளி அமைப்பிற்காக விமான போக்குவரத்து மேலாண்மை அமைப்பை உருவாக்க, நாசாவிண்வெளி நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் பல நிறுவங்களில் உபேர் நிறுவனமும் ஒன்று” என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், உபேர் நிறுவனம் அதன் விமான இயக்குநராக பணிபுரிவதற்காக நாசாவின் 30 வருட அனுபவமிக்க மார்க் மூரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.