June 8, 2023 தண்டோரா குழு
தமிழ் மாநில காங்கிரசை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதையும் பணிகளையும் துவக்கி விட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய ஜி.கே.வாசன்,
கர்நாடக அரசு மேகதாதவில் புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் இந்த பிரச்சினையில் திமுக கூட்டனி கட்சிகள் மௌனம் சாதிக்க கூடாது எனவும் அணை கட்டினால் காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும், இது பயிர் பிரச்சினை அல்ல உயிர் பிரச்சினை என தெரிவித்தார்.மேலும்திமுக அரசு மக்கள் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடிக்கிறது எனவும் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல் மின் கட்டண உயர்வு ஏற்புடையது அல்ல எனவும் உடனடியாக தடுத்து நிறுத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தெரவித்தார்.
கொங்கு மண்டல கனவு திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பெரும்பாலும் முடித்தும் இரண்டு ஆண்டுகளாக சரிவர பணியை செய்யாமல் உள்ளது.விரைந்து அப்பணிகளை முடிக்க வேண்டும் எனகேட்டுகொண்ட ஜி.கே.வாசன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என செய்திகள் வெளிவருகிறது.இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு திணறி வருகிறது என்பது தான் உண்மைநிலை எனவும், அரசு மக்களின் பணத்தை வீணடித்து வருகிறது, இந்த அரசு மக்கள் வாழ்க்கையை சீரழித்து வருகிறது எனவும் குற்றம்சாட்டினார்.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் எனகேட்டுக்கொண்ட ஜி.கே.வாசன்,பொதுமக்கள் நடமாட்டம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமே டாஸ்மாக்கும் போதைப்பொருட்களும் தான் அதை தடுக்க வேண்டும் எனவும் பள்ளிகளின் ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளி தரம் குறையும் தருவாயில் உள்ளதை சுட்டிகாட்டியவர், தேவைக்கு தகுந்தாற்போல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்து அதனை உறுதி செய்ய வேண்டும்..
கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மெத்தனமாக நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.பிளக்ஸ் பேனர் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக,திமுக இவற்றை தாண்டி அனைத்து கட்சிகளும் ஃபிளக்ஸ் போர்டுகளை பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் வைக்க வேண்டாம் எனவே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து எந்த கட்சியினரால் ஏற்படகூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் துவங்கிவிட்டதாக என்பது தொடர்பான கேள்விக்கு ஜூலை 15 முதல் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை பட்டியிலிட்டதோடு, தமாகா பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதையும் பணிகளையும் துவங்கி விட்டோம் எனவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக தமாகா உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகள் கொண்ட கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.