• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

October 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இணையதளம் வாயிலாக நடைபெற்று வந்த நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு இன்று நேரடியாக நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 8 மாதங்களாக இந்த குறை தீர்ப்பு கூட்டம் இணையதளம் வாயிலாக நடைபெற்று வந்தது. கொரோனா தொற்று குறைந்த சூழலில் இன்று நேரடியாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேரடியாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியது:

விவசாயிகள் பயன்படுத்தும் விதைகள் உணவு தானியங்கள் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விதைகள் பண்ணை விவசாயம் குறித்து பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.

அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆற்று நீரை விவசாயத்துக்கும், குடிநீருக்காகவும் பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாசுபடாத நீர் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நீர்நிலைகள் மாசுபடாமல் இருந்து விவசாயம் செழிக்கும்.மழை நீரை சேமிக்க நிலத்தடி நீரை அதிகரிக்க பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளுக்கு மழை நீர் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் விவசாயிகள் கூறுகையில்,

“பயிர் காப்பீடு, ஆயுள் காப்பீடு, மானியம் போன்றவைகள் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்றனர்

மேலும் படிக்க