July 25, 2017
தண்டோரா குழு
நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையெடுத்து, நடைபெற்ற குடியரசுத் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளு மன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற பதவி பதவி ஏற்பு விழாவில் ராம்நாத் கோவிந்துக்கு இந்தியாவின் தலைமை நீதிபதியான ஜேஎஸ் கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அப்போது 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜார்கண்ட் முதல்வர் ரகுவர்தாஸ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.