• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான்கு ஆண்டுகளில் ஐசிடி தொழில்நுட்பம் மூலம் 80 லட்சம் விவசாயிகளிடம் சென்றடைவோம்

April 2, 2022 தண்டோரா குழு

நான்கு ஆண்டுகளில் ஐசிடி தொழில்நுட்பம் மூலம் 80 லட்சம் விவசாயிகளிடம் சென்றடைவோம் என புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோவையில் கூறியுள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள கீதாலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது,

நான் ஆளுநரால் நியமிக்கப்பட்டு முதல்வரின் துணையுடன் பொறுப்பு ஏற்றுள்ளேன். அகில இந்திய அளவிலான வேளாண் பல்கலைக்கழகத்தில் முதல் முதலாக பெண் துணைவேந்தராக பொறுப்பேற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 70% மாணவிகள் படித்து வருகின்றனர்.அதேபோல 52% பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் படியாக எனக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.

நமது வேளாண் துறையில் பல சவால்கள் உள்ளன.பருவ காலநிலை மாற்றம் அதிகரித்து வருகிறது.இது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதேபோல இரண்டாவது வேளாண்மைக்கு பயன்படும் தண்ணீர் மிகப்பெரிய சவாலாக உள்ளது.மூன்றாவது மண் வளம் பாதிப்படைந்துள்ளது.நுண்ணுயிரிகளுக்கும் பாதிப்புகள் உள்ளது.

நிலத்தில் எத்தனை உரம் போட்டாலும் விளைச்சல் அதிகரிப்பதில்லை இவை அனைத்தும் சவாலாக உள்ளது.
ஆகவே இவற்றை சரிசெய்ய ஆய்வை மேற்கொள்ள உள்ளோம்.இது ஒரு முக்கியமான செயல் திட்டமாக கொண்டு வர உள்ளோம்.நேனோ டெக்னாலஜி, ட்ரோன் வழியாக பூச்சி மருந்து தெளித்தல், ரோபோ டெக்னாலஜி ஆகியவற்றின் மூலம் பல திட்டங்கள் உள்ளது.பாரம்பரிய திட்டத்தை நாகரிகத் திட்டத்துடன் இணைக்க திட்டங்களை வகுக்க உள்ளோம். வேளாண் கல்வியில் மாணவர்களை வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற்ற பயிற்சி கொடுக்கிறோம்.

மாணவர்களின் தேவைகளை தயார்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.புது ஐடியாக்களுக்கு மதிப்பளித்து அதை ஆய்வு கொள்வோம்.சர்வதேசத் திட்டங்களையும் செயல்படுத்துவோம்.ஐ.ஐ டி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து எம்.ஓ.யு கையெழுத்திட்டு மாணவர்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வோம்.உழவன் செயலியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளோம்.

அக்ரி டெக் போர்டலை உழவன் செயலியில் லிங்க் கொடுத்துள்ளோம். இதை பார்த்து விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.தக்காளி வெங்காயம் விலைகள் திடீரென குறைந்து ஏறுகிறது. ஆகவே எப்போது விதைக்க வேண்டும். எந்த நேரத்தில் என்ன மாதிரி விலைகள் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள டெமிக் திட்டத்தை வைத்துள்ளோம். இவை குறுஞ்செய்தி வழியாக விவசாயிகளை சென்றடைகிறது.இந்த ஐசிடி டூல் வழியாக 80 லட்சம் விவசாயிகளை நான்கு ஆண்டுகளுக்குள் சென்றடைவோம். அதற்கான திட்டம் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க