• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் 24 மணி நேரமும் தொண்டர்களை சந்திக்கிறேன் ஸ்டாலின் யாரை சந்திக்கிறார் – பழனிச்சாமி

August 24, 2022 தண்டோரா குழு

கோவையில் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

விமான நிலையத்திலிருந்து விழா நடைபெற்ற சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள மண்டபம் வரையிலும் ஆயிரக்கணக்கான அதிமுக வினர் சாலை நெடுகிலும் திரண்டு மேல தாளங்கள் முழங்க எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

IMG-20220823-WA0148
பின்னர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,

அதிமுக அரசு இருந்தபோது கோவை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.விடியா அரசு பொருப்பேற்றபிறகு அதிமுக செயல்படுத்தி வந்த திட்டங்களை முடக்கியது.கோவை மாநகராட்சியில் 500 பணிகள் 150 கோடியில் போடப்பட்ட திட்டத்தை ரத்து செய்த அரசு திமுக அரசு 500 திட்டங்களை இதுவரை திமுக அரசு ரத்து செய்து உள்ளது.

திமுக இன்றைய தினம் 44 கோடியில் 138 பணிகளுக்கு பணி ஆணை பிறப்பித்தும் 18 சதவீதம் கமிஷன் கேட்டதால் ஒப்பந்ததாரர்கள் பணியை எடுக்க முன்வரவில்லை.11 முறை டெண்டர் விட்டும் எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுக்க முன்வரவில்லை.கோவை வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு 160 கோடியில் 50 சதம் பணிகள் முடிவடைந்தும் திட்டத்தை கைவிட உள்ளனர்.

நேற்றைய தினம் வெள்ளளூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இன்றைய தினம் பொள்ளாச்சி நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் மின்சார துறை அமைச்சர் கோவை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.நீண்ட காலமாக கோவை மாநகர மக்களின் கோரிக்கையை ஏற்று அம்மா அரசு திட்டமிட்டு வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

அமைச்சர் நேரு வெள்ளளூர் பேருந்து நிலைய பணி வைந்து விரைந்து முடிக்கப்படும் என வாக்குறுதியளித்தார்.ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் எல் அன் டி அருகே ஏராளமான நிலத்தை வாங்கி குவித்துள்ளதால் பேருந்து நிலையம் மாற்றப்படும் என கூறியுள்ளனர். மக்களின் வரிப்பணம் இன்று வீணடிக்கப்படுகிறது.இந்த கட்டிடத்தை என்ன செய்ய போகிறார்கள் என தெரியவில்லை. விடிய அரசு அம்மா அரசு கொண்டு வந்த திட்டங்களை ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகிறது.ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டம் கோவை மாநகராட்சியில் நடத்தப்படும்.

மெட்ரோ ரயில் திட்டம் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கப்பட்டது.அதை தற்போது கிடப்பில் போட்டுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி,அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நான்கு மாதத்திற்கு முன் நிறைவேற்றப்பட வேண்டிய அத்திக்கடவு -அவினாசி திட்டம். ஆனால் தற்போது பணி தாமதம் காரணமாக மேட்டூர் அணை மற்றும் பவானி அணை உபரி நீர் வீணாகி கடல கலந்துள்ளது.

விடியா அரசின் மெத்தன போக்கு காரணமாக பருவ மழை நீர் வீணாகியுள்ளது.எந்த திட்டத்தையும் இவர்கள் சரிவர நிறைவேற்றவில்லை.கோவை மேற்கு புறவழிசாலை நிலம் எடுப்பு பணி துவங்கப்பட்டு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.750 கோடியில் நடைமுறைப்படுத்தப்பட இருந்த மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

விமான நிலைய விரிவாக்கத்திற்கான போதுமான நிதி ஒதுக்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆனைமலை நல்லாறு திட்டம் கேரள முதல்வரை சந்தித்து பேசினோம். ஆனால் அதை செயல்படுத்த ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.பல பால பணிகள் செயல்படாமல் உள்ளது.அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும்.கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்கள் மீள முடியாமல் இருக்கும் வேளையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.குறு சிறு தொழில் நிறுவனங்களுக்கு குறைப்பதாக கூறியுள்ளார் மின் அமைச்சர் எனவே மின் கட்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

கோவையில் இன்று பேசியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தன்மானம் இல்லாதவர்கள் என கூறியுள்ளார் முதல்வர்.ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதியே நேற்றைய தினம் சொல்லியிருக்கிறார் அதற்கு முதலமைச்சர் என்ன சொல்ல போகிறார் என தெரியவில்லை.திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இன்று விடியா அரசு எதற்கெடுத்தாலும் குழு அமைத்து வருகிறது.ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 18 மாதத்தில் 38 குழுக்கள் அமைத்துள்ளது. மிகப்பெரிய சரித்திரத்தை இந்த அரசு சாதித்துள்ளது இன்னும் ஒரே ஒரு குழு அமைக்கனும். இந்த 38 குழுவும் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை பார்க்க அதற்கு அதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும்.

போதை பொருள் தாராளமாக தமிழகத்தில் கிடைத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்
ஆன்லைன் ரம்மி அம்மா அரசு தடை செய்தது.ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.அப்போது நீதிமன்றத்தில் சரியான தரவுகளை தராததால் அந்த நிறுவனம் வென்று விட்டது.உலகிலேயே விசித்திரமாக சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு நடத்தப்படுகிறது.தமிழக முதலமைச்சர் அதற்கும் குழு போடுவார் என தெரிகிறது.ஒட்டுமொத்த அரசியல் கட்சியும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என குரல் ஒலிக்கிறது. ஆனால் தமிழக முதலமைச்சருக்கு அது கேட்கவில்லை. அதற்கான பாடத்தை வருகின்ற தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்

ஆறுகுட்டியை நம்பி அதிமுக இல்லை.ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பித்தான் அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது அமலாக்கத் துறையில் இருந்து காப்பாற்றிக் கொள்வது எப்படி என்று டிடிவி தினகரன் பார்த்துக் கொள்ளட்டும் உச்ச நீதிமன்றம் வரை இந்த வழக்கிற்காக சென்றோம் தற்போது கீழ் நீதிமன்றமே இதனை விசாரிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அது பற்றி பேசுவது சரியாக இருக்காது.

நான் 24 மணி நேரமும் தொண்டர்களை சந்திக்கிறேன். ஸ்டாலின் யாரை சந்திக்கிறார் சாதாரண தொண்டன் முதல் கிராமத்தில் இருந்து நகரத்திலிருந்து யார் வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.இன்றோடு சரி இனி ஆறுக்குட்டி ஸ்டாலினை சந்திக்க முடியாது.அவரது கேட்டை கூட தொட முடியாது என்றார்.

மேலும் படிக்க