May 6, 2017 தண்டோரா குழு
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 2,200 மையங்களில், நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைப்பெறுகிறது.தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாமி, பெங்காலி ஆகிய 10 மொழிகளில் இந்த தேர்வு நடைப்பெறுகிறது.காலை 10 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு, பகல் 1 மணி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 8-ம் தேதி வெளியிடப்படும்.
தமிழகத்தில் மட்டும் மாணவர்கள் 88,478 பேர் உட்பட நாடு முழுவதும் மாணவர்கள் 11,35,104 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.