• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நியூயார்க்கில் நடைபெற்ற 69-வது பெண்கள் நிலை குறித்த கருத்தரங்கில் கோவை ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் பள்ளி முதல்வர் பங்கேற்பு

April 26, 2025 தண்டோரா குழு

69-வது பெண்கள் நிலை குறித்த ஆணையம் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் தலைநகரமான நியூயார்க்கில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சார்ந்த கோவையில் உள்ள ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் பள்ளியின் முதல்வர் உமா மாணிக்கம் சர்வதேசப் பெண்கள் மேம்பாடு மற்றும் மாற்றத்திற்கான பிரதிநிதியாக பங்கேற்றார்.

இதில் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் கல்வியாளர்கள், அமைச்சர்கள், அறிவியல் அறிஞர்கள் வழக்குரைஞர்கள்,அரச குடும்பத்தினர், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் மற்றும் பெண்களின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான திட்டங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் நைஜீரியா, தென்கொரியா, உகாண்டா, கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இணைந்து பல திட்டங்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த, ஆலோசிக்கப்பட்டது.

மாணவர்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து வடிவமைப்பது மிக முக்கியமான பொறுப்பாகும். இதனை கோவை ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் பள்ளி முதல்வர் உமா தொடங்கியிருப்பது ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் பள்ளிக்கு மட்டும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு பயனளிக்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடலின் பொழுது, ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் பள்ளி முதல்வர் உமா பேசுகையில்,

ஜி ஆர் ஜி நிறுவனங்களில் உயர் தரமான கல்வி சார்ந்த பணிகளையும் நோக்கத்தையும் மிக தெளிவாக எடுத்துரைத்தார். ஜி ஆர் ஜி கல்வி நிறுவனங்களில் புதுமையான செயல்பாடுகள் அடங்கிய அனைத்து மாணவர்களின் செயல்திறன்களை மேம்படுத்தக்கூடிய பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.மேலும் பெண்ணியம் சார்ந்த முற்போக்கான கருத்துக்களை கொண்ட இளைய தலைமுறை தலைவர்களை உருவாக்குவது தனது நோக்கம் என்றார்.

இந்த நிகழ்வில், சர்வதேச பெண்கள் அமைப்பு குழு ( IWPG – International Women Peace Group ), இது உலகம் முழுவதும் பிரச்சனைகளின் தீர்வுகளுக்காக பணியாற்றும் ஒரு புகழ்பெற்ற தென் கொரிய அமைப்பு மற்றும் கோவை ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் பள்ளி இணைந்து மாணவர்களுக்கான கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள், தலைமை பண்பு மேம்பாட்டிற்கான பயிற்சிகள் உடல் மற்றும் மனநலம் சார்ந்த போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன.

இந்த பயணத்தின் போது இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான ஸ்ரீ பர்வதனெனிஹரிஷ் அவர்களை ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் பள்ளி முதல்வர் உமா சந்தித்தார். GRG நிறுவனத்தின் முன்னாள் மாணவியான மைதிலி அங்கே முதன்மை செயலாளர் மற்றும் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் பள்ளி முதல்வர் உமா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் தலைநகரமான நியூயார்க்கில் கடந்த மாதம் 69வது பெண்கள் நிலை குறித்த ஆணையத்தில் கலந்து கொண்டமைக்கு பெருமிதம் அடைகிறேன்.மேலும் கருத்தரங்கத்தில் இடம்பெற்ற ஆக்கபூர்வமான அனுபவங்களையும் செயல் கூறுகளையும் பெண்ணினத்திற்கு பெருமைகூட்டும் வகையில் எடுத்துரைக்க எனக்கு துணையாக நின்றது ஜி ஆர் ஜி நிறுவனம். “ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதில் பங்கு கொண்ட ஒவ்வொரு தனிநபரின் வளர்ச்சி” என்பதற்கேற்ப என்னை இந்த நிகழ்வில் பங்கேற்க வாய்பப்ளித்தமைக்கு எனது ஜி ஆர் ஜி நிர்வாகத்திற்கு பணிவன்புடன் நன்றியை மனமகிழ்வோடு உரித்தாக்குகிறேன் என்று கூறினார்.

மேலும் படிக்க