November 9, 2024 தண்டோரா குழு
இளம் தலைமுறை மாணவர்களுக்கு தேசப்பற்றை ஊக்குவிப்பதி்ல் பெற்றோர்கள்,
ஆசிரியர்கள்,சமூக பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் கடமை இருப்பதாக இந்திய இராணுவத்தி்ல் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் இந்திரபாலன் கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் உரையாற்றினார்.
கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியில் 15வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா கேம்ஃபோர்டியன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
டைனமிக்ஸ் 2024 எனும் தலைப்பில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ்,
தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில் முன்னதாக பள்ளியின் கடந்த ஆண்டிற்கான செயல்பாடுகளை முதல்வர் பூணம் சியால் வாசித்தார்.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய இராணுவத்தி்ல் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் இந்திரபாலன் கலந்து கொண்டு மாணவ,
மாணவிகளிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
உலக நாடுகள் வரிசையில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருப்பதாக குறிப்பிட்ட அவர்,இந்தியா நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம் இருப்பதாக கூறினார்.
பன்முகத்தன்மை கொண்ட சிறப்பு கொண்ட இந்திய நாட்டின் சிறப்புகளை ஒவ்வொரு மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர்,அதே நேரத்தி்ல் இளம் தலைமுறை மாணவர்களுக்கு தேசப்பற்றை ஊக்குவிப்பதி்ல் பெற்றோர்கள்,
ஆசிரியர்கள்,சமூக பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் கடமை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
உலகில் வல்லரசான அமெரிக்கா நாட்டு மக்களின் தேசப்பற்று குறித்து கூறிய அவர்,எதிர் காலத்தில் இந்திய நாடு வல்லரசாக மாறுவதற்கும் ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் தேசப்பற்று முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கேட்டு கொண்டதிற்கு இணங்க இந்திய இராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அரங்கில் கூடியிருந்த மாணவர்கள்,பெற்றோர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுந்து நின்று ஜெய் ஹிந்த் என முழக்கமிட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த மதிப்பெண்கள் மற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.விழாவில் மாணவ,மாணவிகள் இணைந்து நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.