February 21, 2017 தண்டோரா குழு
ஸ்ரீநகரில் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது.
காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் உள்ள சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவை 21) மூடப்பட்டுள்ளது. இந்த சாலையில் எல்லா வானிலையிலும் பயணம் செய்ய முடியும்.
போக்குவரத்துக் கட்டுபாட்டு அறை அதிகாரி கூறுகையில், “சில இடங்களில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை அகற்ற ஆண்களும் இயந்திரங்களும் ஈடுப்பட்டுள்ளனர். போக்குவரத்திற்காக நாளை முதல் சாலைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
திங்கள்கிழமை ஏற்பட்ட மலை காரணமாக 3௦௦ கிலோமீட்டர் தூரம் உள்ள நெடுஞ்சாலையிலும் மற்றும் ஸ்ரீநகரில் உள்ள ரம்பன் பந்தல் பகுதிகளுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிப்ரவரி 17-ம் தேதி முதல் திங்கள்கிழமை இரவு வரை விட்டு விட்டு மலை பெய்தது.
வானிலை ஆராய்ச்சி துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
“ஒரே இரவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து இடங்களிலும் மழை பெய்தது. பெஹல்காம் என்னும் இடத்தில் 2௦ சென்டிமீட்டர் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டது. காஷ்மீர் மற்றும் லடக் பகுதியில் இரவு வெப்பநிலை குறைந்து இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடைகால தலைநகராக விளங்கும் காஷ்மீரில் குறைந்த வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 5.8 டிகிரி செல்சியஸ் இருந்தது.
காஷ்மீரின் நுழைவாயில் நகரமான கஜிகுந்த் நகரில் குறைந்த அளவு வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதன் அருகில் உள்ள கொகேர்நாக் நகரில் மைனஸ் ௦.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதே போல் வட காஷ்மீரில் உள்ள குப்வாரா என்னும் இடத்தில் 2 டிகிரி ஆக பதிவாகியுள்ளது. தென் காஷ்மீரில் உள்ள பிரபல ரிசார்ட் பெஹல்காமில் இரவு வெப்பநிலை ௦.2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பனிசறுக்கிற்கு பிரபலமான குல்மார்க் ரிசார்டில் மைனஸ் 3.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே நகரம் தான் மிகவும் குளிரான நகரமாக காணப்பட்டது. அங்கு மைனஸ் 6.7 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதன் அருகில் உள்ள கார்கில் மைனஸ் 5.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
காஷ்மீரில் உள்ள உயர் இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசான மலை அல்லது பனி பெய்யக்கூடும். அதன்பிறகு வானிலை உலர்ந்து இருக்க வாய்ப்பு உண்டு”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.