July 21, 2017 தண்டோரா குழு
அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிலிருந்து, மண், கல் தூள்கள் ஆகியவற்றை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் போனது.
அமெரிக்கவின் நாசா விண்வெளி நிறுவனம் 1969-ம் ஆண்டு விண்கலத்தின் மூலம் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்ஸ்ட்ராங் நிலவிலிருந்து திரும்பி வரும்போது, அங்கிருத்து மண், கல் தூள்கள் ஆகியவற்றை சேகரிக்க எடுத்து வரப்பட்ட பை ஒன்றை பூமிக்கு கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த பை ஜான்சன் விண்வெளி நிலையத்தில் விடப்பட்டது.
அந்த பை கடந்த 2௦15-ம் ஆண்டு அமெரிக்காவின் இல்லினோயிஸ் நகரில் நடந்த ஏலத்தில் அதை 995 டாலருக்கு ஒரு வழக்கறிஞரிடம் விற்கப்பட்டது.
அந்த வழக்கறிஞர் அந்த பை குறித்து மேலும் சில தகவல்களை அறிந்துக்கொள்ள அதை நாசா நிறுவனத்திற்கு அனுப்பினார். விண்வெளி ஆய்வாளர்கள் அதை சோதனை செய்து பார்த்தபோது, நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள் அதில் இருப்பதை கவனித்துள்ளார்கள். அந்த பையை ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பை மீண்டும் ஏலத்திற்கு விடப்பட்டது. அந்த பையை 1.8 மில்லியன் டாலருக்கு, இந்திய செலவானிபடி அது சுமார் 11 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.