August 8, 2017 தண்டோரா குழு
நீட் தேர்விற்கு பயிற்சி பெற தமிழக மாணவர்களுக்கு 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய சிடி வழங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சி பெற சிடி வடிவில் கையேடு வழங்கப்படும் எனவும்,அதில் 54,000 கேள்வி-பதில்கள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும்,30 மணிநேரம் ஓடக்கூடிய இந்த சிடியில் 30 மணிநேரம் ஓடக்கூடிய இந்த சிடியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இருக்கும் என்றும் வரைபடங்களுடன் விளக்கமான பதில்கள் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தவே தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும்,அவர் கூறினார்.