August 10, 2017 தண்டோரா குழு
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மாதம் மே 7ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வுகள் முடிந்து முடிவுகளும் வெளியாகி, இப்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து நீட் தேர்வு முடிவுக்கு எதிராக மாணவ அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வில் மாறுபட்ட கேள்விதாளை வழங்கியது ஏன்? என சிபிஎஸ்சி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.மேலும்,நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது எனவும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்களே அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி,வழக்கை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.