May 25, 2017 தண்டோரா குழு
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான அவசர வழக்கை உடனே விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நீட் தேர்வு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் முடிந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது.
நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் கேட்கப்படவில்லை என திருச்சியை சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தனர்.
இந்நிலையில் நீட் தேர்வில் பல்வேறு குளறபடி நடந்துள்ளதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனை அவரச வழக்காக எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனிடையே “நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க முடியாது . தேர்வு முடிவை வெளியிட ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவசர வழக்கு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.