September 4, 2017
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசை கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாம் தமிழர் கட்சியினர் கோவை ரயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அக்கட்சியை சேர்ந்த சசிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்
மத்திய அரசு சட்டத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற மெத்தனப்போக்கில் உள்ளது.
கழிப்பிட வசதி கூட கிராமங்களிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நீட் தேர்வுக்கு தயாரவது சாதியமில்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு கனவாக மாற்றிவிட்டது. அதற்கு உதாரணமே அனிதாவின் தற்கொலை. இந்த தேர்வை ரத்து செய்ய வில்லை என்றால் , தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.