January 25, 2017 தண்டோரா குழு
மருத்துவப் படிப்புகளில் சேருவத்ரகான நாடுமுழுவதும் நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வை (நீட்) மாணவர் எழுதுவதற்கு மூன்று முறை வாய்ப்புத் தரப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக நிர்ணியக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் வரும் மாணவர்கள் 30 வயது வரையிலும் “நீட்” தேர்வை எழுதலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இதில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் மூன்று முறை வரை நீட் தேர்வு எழுதலாம்.