September 6, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் நடந்துவரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்துக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதிக்கக் கோரி ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவில், தமிழக அரசு சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சியினர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தடை விதிக்க வேண்டும்.
நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாநில பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.