June 21, 2017
தண்டோரா குழு
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கர்ணனுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதனால் கடந்த ஒரு மாதமாக நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்து வந்தார். இதற்கிடையில் கோவையில் நேற்று கர்ணனை கைது செய்த கொல்கத்தா போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து சென்று அதன் பின் கொல்கத்தாவிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பிரெசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.