March 31, 2017
தண்டோரா குழு
நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 4 வாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் பதில் தரவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது உச்சநீதி மன்றம் அவதூறு வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் கர்ணன் நேரில் ஆஜர் ஆகாததால் உச்சநீதிமன்றம் கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் கர்ணன் இன்று நேரில் ஆஜரானார்.
நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 4 வாரத்தில் பதிலளிக்க நீதிபதி கர்ணனுக்கு உத்தரவிட்டுள்ளது.