• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீருக்காக ஏடிஎம் வைத்துள்ள கிராமம்.

May 3, 2016 தண்டோரா குழு

உலகில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப வீடுகள் கட்ட காடுகள், ஆறுகள் மற்றும் குளங்கள் எனப் பல நீர்நிலைகளை அளித்து வருகின்றனர்.

சரியான இயற்கை சூழ்நிலை இல்லாத காரணத்தினால் மழை பொழிவும் குறைந்துவிட்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குடிக்கத் தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற நிலையை தவிர்ப்பதற்காகவே இந்தியாவில் ஒரு கிராமத்தில் தண்ணீர் ஏ.டி.எம் வைத்துள்ளனர்.

மகாராஸ்டிரா மாநிலம் ஹவுரங்கபத் நகரின் அருகில் உள்ளது பட்டோடா என்ற கிராமம். இக்கிராமத்தில் பெருமளவு தண்ணீர் பஞ்சம் இருந்துள்ளது. இதனால் மக்கள் குறைந்த அளவு நீரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று கிராம நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு வீடுகளிலும் தண்ணீர் எவ்வளவு பிடிக்கின்றார்கள் என்பதைக் கண்டறிவதற்காக மீட்டர் பொருத்தியுள்ளனர்.

இக்கிராமத்தில் கடும் நீர்பற்றாகுறை உள்ளதால் கிராம நிர்வாகம் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தவிர தண்ணீர் பிடிப்பதற்கு என்றே தனியாக ஒரு ஏ.டி.எம் இயந்திரம் வைத்துள்ளார்கள்.

அதற்காகக் கொடுக்கப்பட்ட கார்டை வைத்துக் கொண்டு எந்த நேரத்திலும் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.

ஆனால், அதில் முதலில் 2௦ லிட்டர் தண்ணீர் பிடிக்க வேண்டும், அதற்கு மேல் வேண்டும் என்றால் 5 ருபாய், கொடுத்து 1௦௦ லிட்டர் பிடித்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. மற்றபடித் துணி துவைக்க, பாத்திரம் கழுவ, கிணற்று நீரைத் தான் பயன்படுத்த வேண்டும்.

இத்திட்டத்தை உருவாக்கிய பாஸ்கர் பேரேபட்டேல் என்பவர் கூறும் போது,
இந்தத் திட்டத்தை நாங்கள் திடீரென உருவாக்கவில்லை. இதற்காக 10 முதல் 12 வருடங்கள் மழை நீர் மற்றும் உபரி நீரைச் சேமித்து வைத்துத் தான் இந்த ஏ.டி.எம் தண்ணீர் திட்டத்தை உருவாக்கினோம்.

ஆரம்பத்தில் இதற்காக மிகவும் சிரமப்பட்டோம், தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்திருந்த இந்தக் கிராமத்தில் தற்போது தட்டுப்பாடு குறைந்துள்ளது என்றார்.

மேலும், இந்த முயற்சிக்காக 22 மாநிலம் மற்றும் தேசிய அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளோம் எனவும், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு தாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க