• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீர்வரத்து இல்லாத, கோவில் குடியிருப்புகளில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டி மனு

May 6, 2022 தண்டோரா குழு

நீர்வரத்து இல்லாத கோவில் குடியிருப்புகளில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் அரசு ஆட்சேபகரமான பகுதி என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் பத்தாண்டு காலமாக எவ்வித நீர்வரத்தும் இல்லாத குடியிருப்புகளுக்கும் கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கும் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மனு அளிக்க வந்தவர்கள் ” மாவட்டம் முழுவதும் பட்டா கேட்டு காத்திருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரால் வெறியேற்றாதே, கோவில் நிலங்களில் காலம் காலமாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” என்ற நோட்டீஸ்களை எடுத்துவந்திருந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,

நீர் நிலை பகுதிகளில் வாழும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கபட்டுள்ளதாகவும், இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது எனவும் தெரிவித்தார். நீர் நிலைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அந்த மக்கள் வாழ்ந்து வரும் போது அவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்பது தான் எங்களில் பிரதானமான கோரிக்கை எனவும் கூறினார்.

கோவையில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சர்கார் சாமக்குளம் ஒன்றியம் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிசையில் வாழும் மக்களை நகரத்தை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் அப்புறப்படுத்துவதை நாங்கள் ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார். வாலாங்குளம் பகுதியில் குளத்தை மறைத்து அரசு கட்டிடங்கள் அலுவலகங்கள் ஆகியவற்றை அரசே கட்டி வைத்து விட்டு மக்களை மட்டும் அப்புறப்படுத்துவது என்பது மாற்று இடம் கூட வழங்க தேவையில்லை என்ற உத்தரவை வழங்கி இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அதே போல் கோவில் நிலங்களில் வாழும் மக்களை அப்புறப்படுத்துவதையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என தெரிவித்தார். எனவே தமிழக அரசு இதை வரையறை படுத்தி அந்த மக்களுக்கு அந்த இடத்திலேயே பட்டா வழங்கி வீடு கட்ட உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சில அமைப்புகள் கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் தங்களிடம் வழங்க வேண்டும் என கூறிவருவதாக தெரிவித்த அவர், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோவில்கள் அத்துறையின் கீழேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க