• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்களை மேம்படுத்தி உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

June 14, 2017 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் இங்கு பிரசித்தி பெற்ற தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா என பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றனர். இப்படி உள்ள சுற்றுலா தளங்களில் பெரும்பான்மையானவை ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும். ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா மற்றும் பைக்காரா படகு இல்லம் ஆகிய சுற்றுலா தளங்கள் மட்டுமே சில வருடங்களுக்கு முன்பு தமிழக சுற்றுலா துறை சார்பில் உருவாக்கப்பட்டவையாகும்.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் பெரும்பாலானோர் வெறும் சுற்றுலாத்தளங்களை நம்பி மட்டுமே வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளனர். இப்படியிருக்க மாவட்ட நிர்வாகமோ, சுற்றுலாத்துறையோ இங்கு உள்ள சுற்றுலா தளங்களை அதிக அளவு மேம்பாடு செய்ய வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெரும் நகரங்களில் இருப்பது போல் தீம் பார்க்குகளோ, பொழுது போக்கு அம்சங்களோ இல்லாத காரணத்தால் இங்கு பலமுறை வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான சுற்றுலாத் தளங்களை கண்டு சலிப்படைந்து வருகின்றனர்.

அதிகளவு பெரிய நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ இல்லாத நிலையில் இங்கு உள்ள மக்கள் பெருமளவு வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நீலகிரி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் இங்கு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை அறிவித்திருந்தார். மாவட்டம் முழுக்க 8க்கும் மேற்பட்ட இடங்களில் கேபிள் கார் திட்டம், கணினி மென்பொருள் ஆராய்ச்சி மையம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வர முயற்சி செய்தார். இதனால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க முடியும் என தெரிவித்திருந்தார். எனினும் அவைகள் நாளடைவில் கிடப்பில் போட்டப்பட்டது.

தற்போது, நீலகிரிக்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும், நீலகிரி மாவட்டத்திற்கான எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் கொண்டு வர முயற்சி செய்வதில்லை, என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இங்கு உள்ள பெரும்பான்மையான மக்கள் வேலை வாய்ப்பு இல்லாத சூழலால் சமவெளி பகுதிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இது குறித்து சுற்றுலா வழிக்காட்டி ஆர்.சிவக்குமார் கூறியாதவது,

நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சுற்றுலா முக்கித்துவம் வாய்ந்தது. இங்கு அடிக்கடி வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களில் எந்த ஒரு வளர்ச்சி பணியும் இல்லாததை கண்டு செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு விஷயங்களை கொண்டு வர வேண்டும். இதனால், எங்களைப் போன்றவர்களுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

முன்னாள் உதகை நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜார்ஜ் கூறுகையில்,

சுற்றுலாத் தளங்களில் உள்ள சிறு வணிக வளாகங்கள் அனைத்தும் வெளியூர் முதலாளிகளின் கையில் உள்ளது. உதாரணத்திற்கு படகு இல்ல பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன. ஆனால் நிர்வாகம் இவற்றை வெளியூர் வியாபாரிகளுக்கு கொடுத்துள்ளது. இதனால் உள்ளுர் பொதுமக்கள் எந்த வித பயனும் பெறுவதில்லை. மினி படகு இல்ல பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் சார்பாக பொழுது போக்கு பூங்கா உருவாக்கபட்டது. அந்த சமயத்தில் அவர்கள் இந்த பூங்காவால் பல பேர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதன் பிறகு அந்த விஷயத்தை கண்டு அவர்கள் கொள்ளவே இல்லை. கேபிள் கார் திட்டம் விரைவில் செயல்படுத்த வேண்டும் என கூறினார்.

மக்களுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் விதத்தில் ஏற்கனவே அறிவித்திருந்த பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டாலே வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க