May 24, 2017 தண்டோரா குழு
நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனிலிருந்து மண் எடுத்து வந்த பை வரும் ஜூலை மாதம் 2௦ம் தேதி ஏலம் விடப்படுகிறது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் புஷ் ஆல்டிரின் அப்போல்லோ 2 என்னும் விண்கலம் மூலம் முதல் முறையாக சந்திரனுக்கு கடந்த 48 ஆண்டுகளுக்கு முன் சென்றனர்.
சந்திரனில் முதல் முதலாக காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், “Sea of Tranqulity” என்னும் இடத்தை சுற்றியுள்ள 5 வெவ்வேறு இடங்களிலிருந்த மண், ஒரு சென்டிமீட்டர் விட குறைவான 12 பாறை படிவங்கள் போன்றவைகளை ஒரு பையில் வைத்து, பூமிக்கு கொண்டு வந்தார்.
“ஓர் ஆண்டிற்கு முன்பு வரை, இந்த பையின் உண்மையான சரித்திரம் தெரியவில்லை. 2014ம் ஆண்டு, மூன்றுமுறை ஏலத்திற்கு வந்தும், அதை யாரும் வாங்க முன் வரவில்லை. 2௦15ம் ஆண்டு மீண்டும் ஏலத்திற்கு வந்த போது, நான்சி கார்ல்சன் என்பவர் 995 டாலருக்கு வாங்கினார். அந்த பையை குறித்து மேலும் பல தகவல்களை தெரிந்துக்கொள்ள, நாசா நிறுவனத்திற்கு அனுப்பினார்.
அதை நாசா விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில்,அப்போல்லோ 2 விண்கலம் சந்திரனில் இறங்கிய போது, அங்கிருந்து எடுத்து வந்த பொருட்கள் என்று தெரிய வந்தது” என்று சொதேபே நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சந்திரனில் இருந்து மண் எடுத்து வரப்பட்ட பை வருகிற ஜூலை 12-ந்தேதி ஏலம் விடப்படுகிறது.இந்த பை, சுமார் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் நியூயார்க்கில் உள்ள சோத்பீ மையத்தில் அந்த பை ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.