• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நூல் விலையில் மாற்றம் இல்லை தொழில்துறையினர் மகிழ்ச்சி

March 2, 2023 தண்டோரா குழு

நடப்பு மாதத்துக்கான நூல் விலையில் மாற்றமில்லை என நூற்பாலைகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தொழில் துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள்.

நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில்,நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே, நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது.

கடந்த மாதம் நூல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது.இந்த நிலையில், நடப்பு மாதத்திற்கான (மார்ச்) நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன. இதில், நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை கடந்த மாத விலையே தொடரும் என அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி ஒரு கிலோ 20வது நம்பர் கோம்டு நூல் ரூ.253க்கும், 24ம் நம்பர் ரூ.265க்கும், 30ம் நம்பர் ரூ.275க்கும், 34ம் நம்பர் ரூ.2955க்கும், 40ம் நம்பர் ரூ.315க்கும், 20ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245க்கும், 24ம் நம்பர் ரூ.255க்கும், 30ம் நம்பர் ரூ.265க்கும், 34ம் நம்பர் ரூ.285க்கும், 40ம் நம்பர் ரூ.305க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க