September 16, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், உள்துறை அமைச்சகத்தின் சார்பாக ஆண்டுதோறும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினமான ஜனவரி 23 ஆம் நாள் அன்று பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ‘நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான விருது பெற தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் மற்றும் https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் உள்ள இந்த விருது தொடர்பான லிங்க் மூலமும் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.