February 27, 2017 தண்டோரா குழு
நேபாளத்தில் இரண்டு மிதமான நிலநடுக்கம் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) காலையில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 4.6 மற்றும் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் உள்ள ரமேச்சப் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இது ரிக்டர் அளவு கோளில் 4.6 மற்றும் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்த ரிக்டர் அளவை தேசிய நில அதிர்வு மையம் பதிவு செய்துள்ளது.
முதல் நிலநடுக்கம் திங்கள்கிழமை காலை 9.22 மணியளவிலும் இரண்டாவது நிலநடுக்கம் காலை 1௦.௦6 மணியளவிலும் பதிவாகியுள்ளது. இந்த இரண்டு நிலநடுக்கம் காத்மாண்டு பள்ளத்தாக்கு முழுவதிலும் உணரப்பட்டது.
“முதல் நிலநடுக்கம் காத்மாண்டுவில் உள்ள சாலு என்னும் இடத்தில் (27.36° வடக்கு 86.12° கிழக்கு) மையம் கொண்டிருந்தது. அதே போல் இரண்டாவது நிலநடுக்கம் (27.38° வடக்கு 86.13° கிழக்கு) ஸ்வன்ரா என்னும் இடத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்ப்படவில்லை” என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
“மேலும் 2௦15ம் ஆண்டு நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, 478 நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது” என்று தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.