April 26, 2017
தண்டோரா குழு
மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உறவினர் பி.கே.நேருவின் மனைவி ஷோபா நேரு(108) செவ்வாய்க்கிழமை காலமானார்.
1908ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் என்னும் நகரில் பிறந்த அவருடைய உண்மையான பெயர் போரி ஆகும்.193௦ம் ஆண்டு லண்டன் நகரில் படித்துக்கொண்டிருந்த போது பி.கே.நேருவின் தொடர்பு கிடைத்தது.இருவரும் இடையே காதல் மலர்ந்தது. 1935ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
நேருவின் குடும்பத்தில் முதல் வெளிநாட்டவர் போரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வந்த பிறகு தனது பெயரை ஷோபா நேரு என்று மாற்றிக்கொண்டார். மேலும் அவர் இரண்டு உலகப்போர், இந்திய விடுதலை போராட்டம் மற்றும் ஹிட்லரால் யூத மக்களுக்கு நடந்த பேரழிவு ஆகியவற்றை அவர் பார்த்துள்ளார்.இவர் ஐ.நா.சபைக்கான இந்திய தூதராகவும் பணிபுரிந்து உள்ளார். மறைந்த ஷோபா நேருக்கு அசோக், ஆதித்யா மற்றும் அனில் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.