நேரு கலை அறிவியல் கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ வித்யாகணபதி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

கோவை பாலக்காடு சாலையில், திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கலை அறிவியல் கல்லூரி வளாக நேரு கார்டனில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ வித்யாகணபதி திருக்கோவில். இக்கோவிலின் மஹா கும்பாபிஷேகம் விழா இன்று காலை 9.20 மணி முதல் 10.20 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

மஹா கும்பாபிஷேக விழாவை ஈரோடு, உதயகிரி வேலாயுத சாமி திருக்கோவிலின் ஸ்ரீ பழனிசாமி குருக்கள் மற்றும் பி. குமர ஞானசம்பந்த சிவம் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் அட்வகேட் டாக்டர். பி. கிருஷ்ணதாஸ் மற்றும் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகரியுமான டாக்டர். பி. கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (31.01.2021) மாலை 4.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, மஹா லட்சுமி தீப வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.00 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜை, ரக்ஷாபந்தன காப்பு கட்டுதல், கும்பஸ்தாபன காலகர்ஹண பூஜை, யாகசாலை ப்ரவேசம், முதற்கால யாக சாலை பூஜை, வேதிபார்ச்சனை, அக்னிகாரியம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, உபசார வழிபாடு தீபாரதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு விநாயகர் சிலை ப்ரதிஷ்டை, யந்திரஸ்தாபனம் நடைபெற்றது.

இரண்டாம் நாளான இன்று (01.02.2021) திங்கள் கிழமை காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சூரிய வழிபாடு, கணபதி பூஜை, மண்டப வேதிகா பூஜை, விஷேச மூலமந்த்ர கணப யாகம், திரவ்யாகுதி, ஸ்சாருதி, நாபி சந்தானம், மஹா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து காலை 9.20 மணி முதல் 10.20 மணி வரை விமான கோபுரம், ஸ்ரீ வித்யா கணபதி ஆலய மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.