• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சிறந்த ஆசிரியர் விருது – 2023

March 11, 2023 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாவட்டம் திருமலையம்பாளையம் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறந்த ஆசிரியர் விருது – 2023 வழங்கும் நிகழ்ச்சி இன்று கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

நேரு கல்வி குழுமத்தின் சார்பாக சிறந்த ஆசிரியர் விருது நிகழ்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பாக நிறைவுற்ற நிலையில் ஏழாம் ஆண்டாக இந்த வருடமும் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களையும் முதல்வர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

இவ்வருடம் நடைபெற்ற நிகழ்ச்சியை நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலரும் வழக்கறிஞருமான முனைவர் பி. கிருஷ்ண தாஸ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
நேரு கல்விக்குழுமத்தின் செயலர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி முனைவர் பி. கிருஷ்ண குமார் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி. அனிருதன் அனைவரையும் வரவேற்று சிறப்பானதொரு வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்டத் தலைமை கல்வி அதிகாரி ஆர். பூபதி, கௌரவ விருந்தினராக பொள்ளாச்சி வட்டம் ஆரோக்கியா மாதா பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி ஜீஸ் மரியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு நிர்வாகத்தின் இச்செயலைப் பாராட்டியும் விருது பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தியும் விருத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கியும் மகிழ்ந்தனர்.

இந்த வருடம் 74 விருதாளர்களை தேர்வு செய்து அதில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது 70 பேருக்கும், சிறந்த முதல்வருக்கான விருது கோயம்புத்தூர், டிவி சேகரன் நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பிரமிலா தேவி, திருப்பூர், ஜெயந்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பி. சேகர் குமார் மற்றும் தேனி, மேரி மாதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர், சீனு எம் ஜோசப் ஆகிய மூன்று பேருக்கும் மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருது பீளமேடு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி. கே. விஜயலட்சுமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நேரு கல்விக் குழுமத்தின் கல்லூரி முதல்வர்களும் துறை தலைவர்களும் கலந்து கொண்டு விருத்தாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் இறுதியாக நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர். இரா. மாலதி நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க