June 20, 2023 தண்டோரா குழு
அகில இந்திய ரியல் எஸ்டேட் அமைப்பின் தேசிய அமைப்பு செயலாளர் நேரு நகர் நந்து பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளர், கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் மாநில பொருளாளர்,சமூக ஆர்வலர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர் நேரு நகர் நந்து என அழைக்கப்படும் பத்மநாபன்.நேருநகர் லயன்ஸ் சங்கத்திலும் பொறுப்பு வகித்து வரும் நேரு நகர் நந்துவின் 60 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக,அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு,நேரு நகர் லயன்ஸ் சங்கம்,மற்றும் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
விழாவில் நேரு நகர் நந்து மற்றும் அவரது குடும்பத்தினர்,உறவினர்கள்,நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் முக்கிய விருந்தினர்களாக கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி,பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்ட ஆளுநர் ராம்குமார், முதலாம் துணை ஆளுநர் நித்தியானந்தம், இரண்டாம் துணை ஆளுநர் ராஜசேகர், கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி மற்றும், ,ஃபேரா அமைப்பின் தேசிய துணை தலைவர்,பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி வட்டார தலைவர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கண்பார்வையற்ற 100 மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து கிலோ அரசி மற்றும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.இதே போல 25 மாணவ, மாணவிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் இரண்டரை இலட்சம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீலாம்பூர் குடியிருப்போர் நல சங்கத்திற்கு ரூபாய் ஐம்பாதயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 60 வது பிறந்தநாள் காணும் நேரு நகர் நந்துவிற்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்துகள் வழங்கியும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில்,நேரு நகர் லயன்ஸ் சங்க தலைவர் ஹரிஷ்,செயலாளர் நிர்வாகம் லோகநாதன்,செயல்பாடுகள் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சோபன்குமார், கொங்கு கோவிந்தசாமி,சந்திரசேகர், அமிர்தம் ராமசாமி,லோகநாதன், பெரியசாமி,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் லியோ குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.