September 6, 2021 தண்டோரா குழு
கோவை பால்கம்பேனி பகுதியில் உள்ள நேரு மஹா வித்யாலயா பள்ளியில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது.
கோவை மாவட்டம் பால்கம்பேனி பகுதியில் உள்ள,ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா பள்ளியில், கோவை வெல்பேர் அசோசியேசன், விப்பர் பவுண்டேஷன், மற்றும் ஜித்தோ அமைப்பின் சார்பில் கடந்த நாண்கு நாட்களாக தொடர்ச்சியாக பள்ளி வளாகத்தில்,தடுப்பூசி மூகாம் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று ஜந்தாவது நாளாக, தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகினறது,
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகின்ற இந்த தடுப்பூசி முகாமில் அந்த பகுதி மக்கள்,ஆரவாரமின்றி வந்து தங்களது ஆதார் எண்களை வழங்கி, பதிவு செய்து தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர், இந்த மூகாம் மூலமாக 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பள்ளி வளாகத்தில் தடுப்பூசி செலுத்த பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடக்க முடியாத மாற்று திறனாளிகளுக்கு மருத்துவரே நேரில் வந்து அவர்களின் வாகனங்களில் வைத்து தடுப்பூசிகளை செலுத்தினர்,இதனால் இந்த பகுதியில் உள்ள அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசிகளை செலுத்த முன்வந்து செலுத்தி கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை வெல்பேர் அசோசியேசன், மற்றும் ஜித்தோ அமைப்பின் தலைவர் ரமேஷ் பாப்னா, விப்பர் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சர்வான் போஹரா, மற்றும் கோவை வெல்பேர் அசோசியேசன் செயளாளர், ரமேஷ் சூத்தாலியா, ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லூரி செயலாளர், சுனில் நஹாட்டா, நிர்வாகிகளாகளான, துர்கா ராம், அஜய், நிர்மல் ஷர்மா, லலித் பாட்டி, ஒபாராம், மணீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.