• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேரு விமானவியல் கல்லூரியின் சார்பில் “ஏரோபிளஸ் 2022” விமானவியல் கண்காட்சி

June 24, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியின் சார்பில் “ஏரோபிளஸ் 2022” விமானவியல் கண்காட்சி துவங்கியது. கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் புகழ்பெற்றது நேரு கல்வி குழுமம். இக்கல்வி குழுமத்தின் அங்கமான நேரு காலேஜ் ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் அண்டு அப்ளைடு சயின்சஸ்; சார்பில் கோவையில் ஏரோபிளஸ் 2022 என்ற பெயரில் விமான கண்காட்சி இன்று துவங்கியது. இன்று முதல் இந்த கண்காட்சி வரும் 26 – ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியை கோயம்புத்தூர், சூலூர், ஏர் போர்ஸ் ஸ்டேஷன், 5 பிஆர்டி ஏர் ஆபீசர் கமாண்டிங், ஏர் கமாண்டர் கேஎஎ. சன்ஜீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ஏரோபிளஸ் 2022 கண்காட்சி அமைப்பாளர் ஏ. ரமேஷ் பாபு வரவேற்றார்.

நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் அட்வகேட் டாக்டர். பி. கிருஷ்ணதாஸ் தலைமை வகித்து பேசும்போது,

விமானவியல் துறையில் நேரடியாக தொழில்நுட்ப விஷயங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளிப்பது அரிதான செயலாகும். விமானவியல் துறையில் ஆண்டு தோறும் உருவாகும் 25 சதவீதம் முன்னேற்றத்தை, புதிய திட்டங்களை மாணவ மாணவியர்களும் பொது மக்களும் தெரிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

மேலும் இந்த துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர இந்த கண்காட்சியில் பறக்கும் நிலையில் இயங்கக்கூடிய 5 விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் பார்வையாளர்களின் பார்வைக்காக அணிவகுத்து உள்ளன.

மெய்நிகர் காட்சி வாயிலாக ஏர்போர்ட் சுற்றிபார்த்தல், 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி விமான நிலையம். விமான உதிரிபாகங்கள் மற்றும் எண்ணற்ற அரிய விமானங்களின் புகைப்படங்களும் இக்கண்காட்சியில் வைக்கப்படவுள்ளன. விமான ஆய்வுக் கூடங்கள், மற்றும் விமானம் சம்பந்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. என்று பேசினார்.

நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக இயக்குனர் டாக்டர். பி. கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்து பேசியதாவது :-

எங்கள் நேரு கல்வி குழுமம் சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு 14 வது முறையாக இன்று ஏரோபிளஸ் 2022 விமான கண்காட்சி கோவை குனியமுத்தூரில் அமைந்துள்ள நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இன்று ஜுன் 24 – ம் தேதி துவங்கி வரும் 26 தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகின்றது. வந்து பாருங்கள், விமானங்களை தொட்டு ரசியுங்கள், விமானங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

முதல் நாளான இன்று (ஜுன் 24 – ம் தேதி) பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காலை 10.30 மணி முதல் 3.30 மணி வரை அனுமதியளிக்கப்படும். நாளையும், நாளை மறுநாளும் (ஜுன் 25 மற்றும் 26 – ம் தேதி) பொது மக்களுக்கு காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை அனுமதியளிக்கப்படும். அனைவருக்கும் அனுமதி இலவசம். மேலும் சிறுவர்களுக்கு விளையாட்டு அரங்கம், ஹெலிக்காப்டர் ஷோ, எதிர்பாராத பரிசுகள் மற்றும் உணவு அரங்கம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

மேலும் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிஷ்டசாலிகள் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் ஏறி அமர்ந்து மகிழலாம். குடும்பத்துடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

விழா முடிவில் ஏரோபிளஸ் 2022 கண்கானிப்பு இணை ஒருங்கினைப்பாளரும் பி.எஸ்.சி. ஏரோ சயின்ஸ் (பொறுப்பு) துறைத் தலைவருமான பேராசிரியர் ஆர். சிங்காரவடிவேலு நன்றி கூறினார்.

மேலும் படிக்க