February 17, 2017
தண்டோரா குழு
நைஜீரியா பாதுகாப்புப் படையினருக்கும் “போகோ ஹராம்” தற்கொலைப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் 11 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து ராணுவ வீரர்கள் மற்றும் நேரில் பார்த்த மக்கள் கூறுகையில், “மைடுகுரி நகரின் புறநகர் பகுதியில் தாக்குதலைத் தடுக்க முயன்ற நைஜீரியா படையினருக்கும் போகோ ஹராம் தற்கொலைப் படையினருக்கும் வெள்ளிக்கிழமை காலையில் இடையே சண்டை நடந்தது.
அதில் போகோ ஹராம் தற்கொலை படையை சேர்ந்த 9 பேரும் அப்பாவி பொதுமக்களில் இருவரும் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் தாக்கிய இந்நகரில்தான் தீவிரவாத இயக்கம் தோன்றியது” என்றார்.
காவல்துறை அதிகாரி கூறுகையில், “லாரிகள் நிறுத்தும் இடத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்த இரு பெண்கள் அங்கிருந்த வாகனங்களை நள்ளிரவு வெடிக்கச் செய்தனர். அதில் இருவர் உயிரிழந்தனர்” என்றனர்.
“தற்கொலைப் படையினருடன் மோட்டார் சைக்கிள்களில் சென்ற தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர். அதில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்” என்று தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.
மைடுகுரி நகரின் வடகிழக்கு பகுதியில் போகோ ஹராம் தீவிரவாதிகளை விரட்டிவிட்டனர். ஆனால், ஓரிரு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மதத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 2௦,௦௦௦ பேர் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.